இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது அதிலிருந்து மீட்கும் நோக்கில் 80 கோடியே 80 லட்சம் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியிருந்தது.
இந்த ஆண்டு வழங்கப்படும் நிதி குறிப்பாக விவசாயம்இ மின்சாரம்இ சுற்றுலாஇ திறன் மேம்பாடு மற்றும் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வருவதனால் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்குத் தனது ஆதரவினை வழங்கி வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகாஃபுமி கடோனோ தெரிவித்துள்ளார்.