இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குஎதிரான வழக்கு: ஏப்ரல் 24ம்திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது

0
65

இலங்கைத் தமிழரசுக் கட்சியின், புதிய நிர்வாகத் தெரிவைக் கேள்விக்குட்படுத்தி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில், அக் கட்சியின்
உறுப்பினரொருவரால் கட்சியின் 7 முக்கியஸ்தர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு, எதிர்வரும் 24ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 27ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கில் எதிராளிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்ட 6 பேர் தமது சமர்ப்பணங்களை
மன்றில் முன்வைத்தனர்.
மற்றொரு எதிராளியாகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அன்றைய தினம், மன்றில் முற்படாத நிலையில், அவரது சமர்ப்பணங்களைக்
கேட்டறிந்துகொள்வதற்காக வழக்கானது இன்று ஏப்ரல் 5ம் திகதிக்கு திகதியிடப்பட்டது.
இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, வழக்கில் எதிராளியாகப் பெயரிடப்பட்ட எம்.ஏ.சுமந்திரன்,
தன்சார்பில் ஆஜராகி, தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
கட்சியின் யாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக வழக்காளிகள் தெரிவித்தமைக்கு ஆட்சேபனை வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், கட்சி யாப்பு விதிகள் மீறப்படவில்லை
என தனது சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்தார்.
எதிராளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை, வழக்காளி தரப்பு ஏற்க மறுத்த நிலையில், அவர்களது ஆட்சேபனைகளைப் பதிவு செய்வதற்காக வழக்கு
ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.