Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை 8,000 ஆக கொரியா அதிகரித்துள்ளது.தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போது அந்த திணைக்களத்தின் பிரதானி, இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.கொரிய மொழி ஆற்றலுடன் தயாரிப்பு பிரிவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத்துறையில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக, தயாரிப்புத் துறைகளில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து, இணையத்தளத்தில் பதிவை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக கப்பல் கட்டுமானத்துறையில் தொழில் வாய்ப்பிற்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பிட்ட இணையத்தள பதிவு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்பதனால், அதற்கு முன்னர் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.அடுத்த வருடம் முதல் E9 விசா பிரிவில் கப்பல் கட்டுமானத் தொழில்துறையில் தொழிலாளர்களுக்கு பரீட்சை நடத்தி, 900 பேரை வேலைவாய்ப்புகளில் இணைத்துக்கொள்வதற்கு கொரிய மனித வள திணைக்களம் உடன்பட்டுள்ளது.