இலங்கையின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் தின வார நிகழ்வுகள் இன்றைய தினம் பொலிஸ் நிலையங்களில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.ஈ.சரத்குமார தலைமையில் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
பொலிஸ் கொடியேற்றப்பட்டு தேசிய பொலிஸ் தின வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.ஈ.சரத்குமார,பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடாது பொதுமக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்ற முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
இன்று தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் பொலிஸ் தின வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.