இலங்கையிலிருந்து நாடு திரும்பிய அமெரிக்க எஃப்.பி.ஐ முன்னாள் உயரதிகாரி கைது!

0
127

அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐ.யின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், இலங்கைக்கான பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். நியூயோர்க் கள அலுவலகத்தில் உளவுத்துறைக்கு பொறுப்பான சிறப்பு முகவராக இருந்த சார்லஸ் மெக்கோனிகல் என்பவரே கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவருடனான உறவுக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.