இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று வரை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளனர் என அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் செனட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும் ஒடுக்குமுறையை எதிர் கொள்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியின் டவுன்கோலில் இந்த ஞாயிற்றுக்கிழமை
இடம்பெறவுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது தமிழ் ஈழத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி தருணங்களில் மே 2009 இல் இடம்பெற்றது.
சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் அல்ல யுத்த சூன்ய வலயம் தாக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்தவர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1 இலட்சத்து 70 ஆயிரம் தமிழர்கள் அந்த ஈவிரக்கமற்ற யுத்தத்தின் இறுதிக் காலங்களில் கொல்லப்பட்டனர்.
இந்த குற்றங்களுக்கு காரணமானவர்கள் இன்றும் இலங்கை இராணுவத்திலும் அரசாங்கத்திலும் உயர் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர்.
இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.
பலர் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். எங்கள் தேசம் தனது இதயத்தை அவர்களுக்காக திறக்கவேண்டும்.
அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்க வேண்டும் என டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.