2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215 மில்லியன் லீற்றர் மதுபானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் உப தலைவர் நளீன் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை மக்கள் 120 மில்லியன் லீற்றர் மதுபானங்களை மட்டுமே விற்பனையாகியுள்ளதாக நளீன் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு சர்வதேச மது ஒழிப்பு தினத்தின் போது மது பாவனை கணிசமான அளவு குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் சர்வதேச மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.