நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நேபாள பிரஜை ஒருவரை நேபாள பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக மை ரிபப்ளிகா செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது டெக்சாஸில் வசிக்கும் 52 வயதான ஹஸ்தா கௌதம், தனது வாடிக்கையாளர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக நேபாள பொலிஸ் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கௌதம் கடத்தல் நடவடிக்கையின் மூளையாக இருந்து இதுவரை சுமார் 200 நேபாள பிரஜைகளை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளார்.
இதற்காக அவர், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை, கொலம்பியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் 5 முகவர்களை நியமித்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது. இதேவேளை கவுதமால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.