இலங்கையைச் சேர்ந்த மேலும் நால்வர் இந்தியாவில் தஞ்சம்

0
161

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகு மூலமாக இந்தியா தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று காலை சென்றடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மரைன் போலிசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.