இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின், மட்டக்களப்பு செயலாளருக்கு எதிராக போராட்டம்

0
185

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உதயரூபனுக்கு எதிராக பாரிய அமைதி வழி போராட்டம் இன்று மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
‘அலுவலகத்திற்குள் அரச அதிகாரி தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்’ எனும் வாசகம் அடங்கிய பதாதையினை காட்சிப்படுத்தியவாறு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் இணைந்த ஏற்பாட்டில் அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது.
கடந்த வாரம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உதயரூபன் அரச அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக பாரிய கண்டன அமைதி வழி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.