நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6” மேற்கொள்ளும் ஆய்வுகளுக்காக அதன் ஆய்வுக் குழு இன்று இணையவுள்ளதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் / நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதோடு, இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
“ஷி யான் 6” என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி நாட்டுக்கு வந்தபோது, சோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில், அதன்பின்னர் வெளிவிவகார அமைச்சு சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் கடற்பரப்பின் மேற்குப் பகுதியில் குறித்த கப்பலுடன் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.