இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

0
128

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடைவிதிக்குமாறு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் பீட்டர் இளஞ்செழியன் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்காலத் தடை விதித்து கட்டாணை பிறப்பிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை இன்னைய தினம் எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி மற்றும் 27 ஆம் திகதி நடைபெற்ற
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் யாப்புக்கு விரோதமாக நடைபெற்றதாகவும் இதனால் கூட்டங்களின்போது இடம்பெற்ற உறுப்பினர் தெரிவுகளை இரத்துச் செய்யுமாறும் கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடைவிதிக்குமாறும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த 15 ஆம் திகதி அழைக்கப்பட்ட நிலையில் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதுடன் வழக்கு இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.