இலங்கை தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட பங்களாதேஷ் அதிகாரிகள்

0
189

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வொஷிங்டன் சென்றிருந்த இலங்கையின் அதிகாரிகள் குழு, பங்களாதேஷ் நாட்டின் அதிகாரிகளை சந்தித்துள்ளது. ஏற்கனவே பங்களாதேஷ், இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பறிமாற்ற வசதிகளுக்காக வழங்கியிருந்தது. எனினும் அதனை உரிய காலத்துக்குள் இலங்கையால் மீளச் செலுத்த முடியாமல் போன நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்போது தாம் வழங்கிய 200 மில்லியன் டொலர்களை இலங்கை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருப்பிச் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இதற்கு இலங்கை அதிகாரிகள் வழங்கிய பதில் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சந்திப்பில் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரூப் தாலுக்டர் தலைமையிலான குழுவினரும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.