இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை

0
3

சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து குறுஞ்செய்தி (SMS) வந்திருந்தால் மட்டுமே இன்று (16) முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய மின்சக்தி அமைப்புகளை துண்டிக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில சவால் மிகுந்த நாட்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.