கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு எனும் நூலின் அறிமுக விழா, மட்டக்களப்பு காத்தான்குடியில்
இடம்பெற்றது
ரைஸ் ஸ்ரீPலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் நவாஸ் தலைமையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில், இலங்கை முஸ்லிம்களின் தேசிய
பங்களிப்பு எனும் நூல் அறிமுகம் செய்து வழங்கப்பட்டது.
நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை ரைஸ் சிறீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் அபூபக்கர் அக்ரம் நழீமி நிகழ்த்தியதுடன், நூலாசிரியர்
கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்
சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
நூலின் அறிமுக விழாவில் நூலாசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் நழீமி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள்,
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், ரைஸ் ஸ்ரீPலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.