Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான (66 கிமீ) இலங்கை ரயில்வேக்கான சிக்னல் அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் ஆணையிடுவதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் IRCON Ltdக்கும் இடையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே. முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்;நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத்; இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை ரயில்வே மற்றும் IRCON Ltd ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.318 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 14.90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் திட்டத்தின் (LOC) கீழ் குறிப்பிடப்பட்ட திட்டம் செயற்படுத்தப்படுவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகர் தனது உரையில், இலங்கை மக்களின் நடமாட்டத்தை இலகுபடுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ரயில்வே சிக்னல் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டத்திற்கான LOC, இலங்கை மக்களுடன் இந்திய அரசாங்கமும் மக்களும் நிற்க வேண்டும் என்ற தொடர்ச்சியான விருப்பத்தை அடையாளப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு பல வழிகளில் ஆதரவளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நன்றி தெரிவித்தார். இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து மட்டுமே LOC வடிவில் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
ரயில்வே துறையில் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான திட்டங்கள் இன்றுவரை 5 இந்திய LOCகளின் கீழ் முடிக்கப்பட்டுள்ளன. மார்ச் 2009 இல் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த IRCON Ltd, இந்திய உதவியுடன் இலங்கையில் பல வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், இலங்கை ரயில்வேயின் புனர்வாழ்வு மற்றும் நவீனமயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.தற்போது, IRCON Ltd ஆனது, மஹோவில் இருந்து ஓமந்தை வரையிலான (128 கிமீ) பாதை புனரமைப்பு மற்றும் துணைப் பணிகள் உட்பட ரயில் மார்க்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை USD 91.27 மில்லியன் செலவில் மேற்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான மார்க்க புனரமைப்பு பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்திலிருந்து மாஹோ வரையிலான பகுதிக்கான பணிகள் 2024 ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கப்படும்.