இலங்கை வங்கியின் யாழ்ப்பாண பேருந்து நிலைய கிளை  புதிய இடத்தில் வைபவரீதியாக திறந்து வைப்பு!

0
189

இலங்கை வங்கியின் யாழ்ப்பாண பேருந்து நிலைய கிளை  இடம் மாற்றலாகி புதிய இடத்தில் வைபவரீதியாக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கையின் தலைசிறந்த அரச வங்கிகளில் ஒன்றாகிய இலங்கை வங்கியின் யாழ்ப்பாண  பேருந்து நிலைய கிளை  இடம் மாற்றலாகி புதிய இடத்தில் நவீன தொழில்நுட்ப முறைகளுடன் கூடிய புதிய பரிமாணத்துடன் இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது 

மததலைவர்களின் ஆசி உரையுடன் ஆரம்பமாகிய வங்கிக் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மேள  வாத்தியங்களுடன் திறப்பு விழா  இடத்திற்கு அழைத்து வரப்பட்டு வங்கியின் யாழ் பேருந்து நிலைய புதிய கிளை இலங்கை வங்கியின் வட பிராந்திய உதவி பொது முகாமையாளரால் நாடா வெட்டிவைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் பிரதம வருந்தினராக இலங்கை வங்கியின் வட பிராந்திய உதவி பொது முகாமையாளர் வ. சிவானந்தன், இலங்கையின் வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர் திரு சி.ஆனந்தராஜா, இலங்கை வங்கியின் யாழ்உயர்தர  கிளையின்  முகாமையாளர் கு, சிவஞானசுந்தரம்   யாழ் மேற்கு பிரதேச முகாமையாளர் திருமதி நி. சுரேந்திரராஜ் சிறப்பு விருந்தினராக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்

அ.ஜெயகுமரன், இலங்கை வங்கியின் ஏனைய கிளை முகாமையாளர்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 குறித்த நிகழ்வில் கடன் கோரிக்கை விடுத்த பயனாளிகளுக்கான கடன் பத்திரம் மற்றும் இன்றைய புதிய கிளையின் புதிய வைப்புக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.