இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்; தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலாபமீட்டும் நிறுவனங்களையே தற்போதைய ஜனாதிபதி தலைமையலிலான அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிக்கின்றது..
இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்யும் முயற்சிக்கு பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில் நாம் எதிர்ப்பையே தெரிவிக்கின்றோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.