இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை

0
187

சமூக மட்டத்தில் இளைஞர் யுவதிகள் எவ்வாறு தலைமைத்துவ பண்புகளுடன் செயல்படுவது, இளைஞர் யுவதிகளுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மன்ரேசா தியான இல்லத்தில் நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவின் கொத்தியாவல , வாழக்காளை ,இலுப்படிச்சிச்சேனை , முள்ளாமுனை ஆகிய கிராம செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மன்ரேசா தியான இல்லத்தில் நடைபெற்றது.

எகெட் நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இணைப்பாளர் கிறிஸ்டி வழிகாட்டலில் எகெட் நிறுவன சிவிக் லயலக் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டொம்னிக் சுதர்சன் ஒழுங்கமைப்பில் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி எ .ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக சமூக வெளிப்பாட்டு அமைப்பின் இயக்குனர்களான சாள்ஸ் சசிகரன் , தங்கையா தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

எகெட் நிறுவனத்தின் சிவிக் லயலக் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவின் கிராம மட்டத்தில் இயங்கி வரும் சமூக மட்ட இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவம், வன்முறையற்ற தொடர்பாடல் மற்றும் ஆவண காட்சிபடுத்தலுடனான தொடர்பால் பயிற்சி பட்டறை தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.