நுவரெலியாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று இடம்பெற்றது.
நுவரெலியா மின்சார சபைக் கட்டடத்திற்கு முன்பாக அதிகாலை 4 மணி முதல் காத்திருந்த மக்களுக்கே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.
சுமார் ஆயிரத்து 150 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியாவிற்கு எடுத்து வரப்பட்டன.
அவை, நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஆயிரத்து 150 சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்பட்டபோதும், அங்கு கூடியிருந்த மக்களின் முழுமையான தேவையை பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.