இவ்வருடத்தில் 3000 க்கும் அதிகமான இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

0
81

இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச ஊழல் சார் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் அதிகளவு முறைப்பாடுகள் அரச ஊழியர் கட்டமைப்பு செயற்பாடுகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றவையாகக் காணப்படுவதோடு, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளும், அதிபர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இலஞ்ச முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் விசாரணைப் பணிகளைத் தொடர்வதற்கு ஆணைக்குழுவில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.