இஸ்ரேல் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளதாகவும், இது இஸ்ரேல் வரலாற்றில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையின் அளவாகும் எனவும் அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
வெப்ப அலை காரணமாக இஸ்ரேல் நாட்டில் சுமார் 220 திறந்தவெளி பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
எனினும் தீயணைப்பு துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.