இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்கும் வகையில் தமது இராணுவ கப்பல்கள் மற்றும் விமானங்களை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகள் மற்றும் வெடிபொருள் விநியோகத்தை அதிகரிப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் அஸ்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பலஸ்தீனர்களுக்கு எதிரான ‘ஆக்கிரமிப்பு’ என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. “ஆக்கிரமிப்பை ஆதரித்து விமானதாங்கி கப்பலை வழங்கும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உண்மையில் எமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் பங்கேற்பதாகும்” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை நேற்று முன்தினம் (08) தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான மேலதிக உதவிகள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.