இஸ்ரேல் – ஈரான் மோதல் பின்னணி : தங்க விலையில் தாக்கமா?

0
4

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான தற்போதைய மோதலினால், சில நாட்களாகச் சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்க விலையில் சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

அந்த வகையில், சர்வதேசத்தில் தங்கத்தின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,348.91 அமெரிக்க டொலராக நிலவுகிறது. 

இலங்கையை பொறுத்தவரையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாயாகவும், 

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 201,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாயாகவும், 

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.