இஸ்லாமிய பாடநூல்களைத் திரும்பப் பெறுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் உத்தரவு

0
257

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பாடநூல்களைத் திரும்பப் பெறுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பீ.எம்.அயிலப்பெரும உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் தேசிய பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றுநிருபத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமிழ் சிங்கள மொழிமூலமான இஸ்லாம் 6 ஆம் தரம், சிங்கள மொழிமூலமான இஸ்லாம் 7 ஆம் தரம், தமிழ் மொழிமூலமான இஸ்லாம் 11 ஆம் தரம், தமிழ் சிங்கள மொழிமூலமான இஸ்லாம் 10 ஆம் தரம் ஆகிய பாடநூல்களே அவ்வாறு திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடநூல்களில் காணப்படும் திருத்தப் பணிகள் காரணமாகவே மேற்படி நூல்கள் திரும்பப் பெறப்படுவதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பீ.எம்.அயிலப்பெரும குறிப்பிட்டுள்ளார்.