இலங்கை போக்குவரத்து சபைக்கு எரிபொருள் நெருக்கடி இல்லை என்று, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாங்கள் நட்டத்தில் செல்லும் நிறுவனம் அல்ல. முன்னொரு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை நட்டத்தில் இயங்கியது. கடனுக்கு எரிபொருள் பெற்றுவந்த காலமொன்று காணப்பட்டது.
சந்தையில் எரிபொருள் காணப்படுமாயின் பணம் செலுத்தியே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும். ஏனைய சபைகளைப் போன்று நாங்கள் நட்டத்தில் செல்லவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.