இ.போ.ச. பேருந்து சாரதி கடத்தல்

0
172

கண்டி மாவட்டம் கம்பளை பிரதேசத்தில் பேருந்தொன்றின் சாரதி கடத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியே இவ்வாறு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓடும் பேருந்தை மறித்து வான் ஒன்றில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் கடத்தப்பட்டவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவித்தனர்.

கடத்தல் தொடர்பில் இதுவரை விடயங்கள் தெரியவராத நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.