ஈழவர் ஜனநாயக முன்னணியின்
ஊடக சந்திப்பு

0
184

ஈழவர் ஜனநாயக முன்னணி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வடகிழக்கில் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் மத்திய குழு கூட்டம் கல்லடியில் நடைபெற்றது.அந்த கூட்டத்தினை தொடர்ந்து ஈழவர் ஜனநாயக முன்னணியின் ஊடக சந்திப்பு நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் கருத்து தெரிவித்தார்.

இன்று தமிழ் மக்கள் ஏமாந்த சரித்திரமே உள்ளது ஒழிய மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுத்தில்லை.
இன்று தமிழ் மக்களும் நாங்களும் மாற்றத்தினை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.அந்த மாற்றத்தினை உருவாக்கவேண்டிய கடப்பாடு ஈரோசுக்கு உள்ளது.