ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வந்தன. ஆனால் சமீப காலமாக உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் குறைந்து வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு பொருளாதார உதவி வழங்குவதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் அரசு பணிகளுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேறவிடாமல் அங்குள்ள எதிர்க்கட்சிகள் தடுத்தன. இந்தநிலையில் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் வழங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அதேசமயம் தைவானுக்கு வழங்கும் உதவியை அதிகரிக்க ஆதரவு கூடுகிறது. ஏனெனில் ரஷியாவை விட சீனாவே அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தைவானுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தலை குறைக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.