உதயாதேவி புகையிரத ​சேவை நிறுத்தம்

0
181

சாரதிகள் பற்றாக்குறை காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் உதயாதேவி புகையிரத ​சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த புகையிரத ​சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓட்டுனர்கள் ஓய்வு பெற்றதால், நீண்ட தூர புகையிரதங்களுக்கு ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் சில இரவு நேர அஞ்சல் புகையிரதங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள புகையிரத சாரதிகள் நீண்ட தூர சேவைகளுக்கு விண்ணப்பிக்க தயங்குவதால், நீண்ட தூர சேவைகளை நடத்துவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்தம் 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.