உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பம்

0
149

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர கேட்டுக்கொள்கின்றார். பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு பரீட்சை நுழைவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.