உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்

0
196

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு, பரீட்சகர்களை இணைத்துக்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ள நிலையில், நேற்று முதல் எதிர்வரும் மே 2ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாய விஞ்ஞானம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடலும் ஊடகக் கற்கையும், வணிகக்கல்வி, பொறியியல் தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.