உயர்பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்த ஜனாதிபதி!

0
138

கொழும்பின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, உயர் நீதி மன்ற வளாகம், பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த பிரதேசங்களுக்குள் தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி ஒன்றுகூடல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது இலங்கை குடி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றில் சோசலிச இளைஞர் முன்னணியினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தி செப்ரெம்பர் 16ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பை
ரத்து செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வர்த்மானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.