உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

0
185

பலம் பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அல்சுஹிரியா அரபுக் கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டமை குறித்த ருவிற்றர் பதிவுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

‘முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடந்த 2013ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது. அது மீண்டும் நிகழ்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம் பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், மருத்துவர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லிம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன’ என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.