உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜெயவர்த்தன முழுமையாக செலுத்தி முடித்துள்ளார்.
தனது சட்டத்தரணி ஊடாக அவர் இதனை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயப்பட்ட அடிப்படை மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் நிலாந்த ஜெயவர்த்தன 75 மில்லியன் ரூபாய்களை இழப்பீடாக செலுத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் முன்னதாக 10 மில்லியன் ரூபாயை செலுத்தியிருந்த நிலையில், தற்போது 65 மில்லியன் ரூபாவை செலுத்தி அவர் முழு இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தி முடித்துள்ளார் என அவரது சட்டத்தரணி நேற்று நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினார்.
நேற்று பிற்பகல் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவரது சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.இதேவேளை நீதிமன்றில் நேற்று முன்னிலையான நிலந்த ஜயவர்தன, இந்தத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்காக நீதிமன்றில் மன்னிப்புக் கோருவதாக குறிப்பிட்டார்.இந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணையை நவம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்தக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.