அரசாங்கத்தினால் வழங்கப்படும் உர மானியங்கள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தம்பலகாமம் பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பருவகால மழையை நம்பி செய்யப்படும் நெற்செய்கையின் போது பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களை அரசு தடை செய்ததன் காரணமாக பொருத்தமான நேரத்தில் பயிர்களுக்கான சேதன உரங்கள் கிடைக்கப்பெறாததாலும் விழை நிலங்கள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கொரோணா பேரிடரினால் பயணத்தடை விதிக்கப்பட்டதன் காரணமாக பரவலான உரக் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் உரங்களை அதிக விலை கொடுத்து தாம் வாங்க் வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பரவலான வயல் நிலங்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் இந் நிலை தொடரும் பட்சத்தில் எதிர் காலத்தில் விளை நெல்லுக்குக் கூட கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.