29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உற்பத்திப் பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது:

உற்பத்திப் பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது, அதற்காக முழு தேசமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 19 திறந்தவெளிப் பல்கலைக்கழக வளாகங்களிலும் போதிய இடவசதி உள்ளதுடன், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மிகவும் குளிரான காலநிலை உள்ள நாடுகளில், பனி இல்லாத ஆறு மாதங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளின் தாழ்வாரங்களில் கூட, தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதில் மக்கள் ஈடுபட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுதவியின் கீழ் நாட்டின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பின்னணியில், அரசாங்கம் மற்றும் நாட்டின் பிற நிறுவனங்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் வரவிருக்கும் பேரழிவு சூழ்நிலைகளை சமாளிக்க சரியான முறையில் தயாராக இருக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles