149வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் பிரதம அஞ்சல் அதிபர் லியனகெதர தலைமையில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
அஞ்சல் உத்தியோகத்தர்கர்கள், பொதுமக்கள், பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
ஒக்டோபர் 09 ஆம் திகதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.