உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல்

0
139

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘கடல் வளத்தை காப்போம்’ எனும் தொனிப்பொருளில், வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோரத்தில் தூய்மைபடுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலா வழிகாட்டிகள், வடமாகாண சுற்றுலா வழிகாட்டி பயிலுனர்கள், யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி விருந்தோம்பல் கற்கை மாணவர்கள், நல்லூர் லயன்ஸ் கழகத்தினர் இணைந்து குறித்த தூய்மை பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.