உலக சேவைகள் தினத்தை முன்னிட்டு யாழ் பண்ணை கடற்கரை  பகுதியினை துப்புரவாக்கும் பணி முன்னெடுப்பு!

0
212

உலக சேவைகள் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்யாழ் மாநகரசபையின் ஒத்துழைப்புடன்  யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை  பகுதியினை துப்பரவாக்கம் செயற் திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது

 பொலிஸ் திணைக்களத்தின் 156 வதுஆண்டு நிறைவை முன்னிட்டு  பொலிஸ் வாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உலக சேவைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் யாழ் மாநகர சபையுடன்   இணைந்து பண்ணை கடற்கரை பகுதியினை துப்புரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது 

 பண்ணை கடற்கரையினை துப்பரவு  செய்யும் பணியில் யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை பிரதிமுதல்வர் மற்றும் யாழ் மாநகர சபை பணியாளர்கள் கலந்து கொண்டனர்,,