சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 10வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவர் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.