அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை, பாண்டிருப்பு,கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் 120 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வசிக்கும் பிரபா மற்றும் செல்வன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.