உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

0
203

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இஸ்லாமபாத் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் தலைவர் துசானந்தன் தலைமையிலான குழுவினர் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்லவராசா கஜேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று வழங்கப்பட்டது .