உள்நாட்டு வருமானம் திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் 20 ஆம் திகதி!

0
3

உள்நாட்டு வருமானம் திருத்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

இந்த மாதம் 20 ஆம் திகதி பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் பின்னர் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு வருமானம் திருத்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை மாலை 6.00 மணியின் நடத்துவதற்குச் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.