உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டடத் திட்டங்களுக்கு ஒன்லைன் ஊடாக அனுமதி

0
166

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டிடத் திட்டங்களுக்கு அடுத்த 2 மாதங்களில் ஒன்லைன் ஊடாக அனுமதி வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 337 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்குவதில், 9 ஆயிரம் சதுர அடிக்கு குறைவான நிலப்பரப்பிற்கு உட்பட்டதாக அமையும் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. குறித்த நிலம் 9 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருந்தால் அல்லது ஐந்து மாடிகளுக்கு மேலான கட்டடமாக இருந்தால் நகர அபிவிருத்தி அதிகாரசபையே அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.