உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவு!

0
285

இன்று முதல் உள்ளூராட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று முதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.