இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாற்றுப் பொருட்களை பாதுகாப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சு மற்றும் தொழில்துறை அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி இது தொடர்பாக முடிவெடுக்கும் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.