ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்

0
152

ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. நினைவுதின நிகழ்வில் அவரின் உருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி, 2009 பெப்ரவரி 12ஆம் திகதி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியின் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.