ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் கொவிட்டை அடக்குவதற்கான செயலில் சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைத்து குடும்பங்களும் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தல்.
நாடு முழுவதும் 31,457 வீடுகளில் 84,000 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 13,911 வீடுகளில் 40,676 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந் துரையாடலில் கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற் பாட்டுக் குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Post Views: 10