ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் களவு!ஒருவர் கைது.

0
189

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் மாதா கோவிலடி பகுதியில் 48 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் 1500 ரூபா பெறுமதியான கோழி களவாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒரு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குழு, அதே கிராமத்தில் 21 வயதுடைய நபரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.

குறித்த சந்தேகநபரை நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.